Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

போனால் போகட்டும் போடா... தவெக தலைமை மீது நாஞ்சில் சம்பத் அதிருப்தி? காரணம் இதுவா?

போனால் போகட்டும் போடா... தவெக தலைமை மீது நாஞ்சில் சம்பத் அதிருப்தி? காரணம் இதுவா?
விஜய் - நாஞ்சில் சம்பத்

இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப்பளிக்காத அதிருப்தியில், தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், ‘போனால் போகட்டும் போடா’ என சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

சென்னை:

இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப்பளிக்காத அதிருப்தியில், தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், ‘போனால் போகட்டும் போடா’ என சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக, மதிமுக, அதிமுக, அமமுக என பல்வேறு கட்சிகளின் பிரச்சாரகராக விளங்கிய நாஞ்சில் சம்பத், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தவெகவில் இணைந்தார். அவருக்கு தவெகவின் பரப்புரைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தேர்தலின்போது தவெக வேட்பாளர்களை ஆதரித்துப் பேச அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தொலைக்காட்சி விவாதங்களிலும் தவெக சார்பில் நாஞ்சில் சம்பத் பேசி வந்தார்.

இந்நிலையில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களில், தவெக வேட்பாளர்கள் களமிறங்கிய நிலையில், அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய நாஞ்சில் சம்பத்திற்கு கட்சித் தலைமை வாய்ப்புத் தரவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருந்தார். இதை வெளிப்படுத்தும் வகையில் நாஞ்சில் சம்பத் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “போனால் போகட்டும் போடா.. இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா.. என்னுடைய பகலை யாரும் இருட்டாக்க முடியாது.. என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது.. என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது..” என தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து தவெக நிர்வாகிகள் கூறியதாவது: திமுக கூட்டணியில் மதிமுக இருந்த வரை அக்கட்சி குறித்து அவர் வைத்த விமர்சனங்களை தவெக தலைமை பொருட்படுத்தவில்லை. தேர்தலுக்கு பிறகு தவெக கூட்டணியில் இணைந்த பின்பும், வைகோ, துரை வைகோ குறித்து கடுமையான விமர்சனங்களை நாஞ்சில் சம்பத் தொடர்ந்து வைத்து வந்தார். இது கட்சித்தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

குறிப்பாக, வைகோ, துரை வைகோ உள்ளிட்டோர் முதல்வர் விஜய் உடன் நெருக்கமாக பழகிய நிலையில், நாஞ்சில் சம்பத் செயல்பாடு குறித்து அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். இதையடுத்து முதல்வர் உத்தரவின்பேரில், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் அறிவுறுத்தியும், நாஞ்சில் சம்பத் தனது பாணியை மாற்றிக் கொள்ளவில்லை.
இதனால், தவெக மேடைகளில் அவருக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. தற்போது இடைத்தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த அதிருப்தியில் அவர் இதுபோன்ற பதிவை வெளியிட்டு இருக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக கருத்தறிய நாஞ்சில் சம்பத்தை தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை ஏற்கவில்லை.

முந்தைய செய்தி
மக்களே குடையை மறந்துடாதீங்க - 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு!
அடுத்த செய்தி
மதி சந்தை இணையதளம் முடக்கம் - திக்குமுக்காடும் மகளிர்

தொடர்புடைய செய்திகள்